தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘சேயோன் ‘ திரைப்படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்சே, பால சரவணன், ராஜ் பி. ஷெட்டி, அருள்தாஸ், ரேச்சல் ரெபாகா, சிங்கம் புலி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரூரல் மித்தலாஜிக்கல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டெர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி உள்ளது என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.