ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இரண்டு வகை கிரிக்கெட் தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டு, திடீர் சுகவீனம் காரணமாக குழாத்திலிருந்து நீக்கப்பட்ட பந்துவிச்சு சகலதுறை வீராங்கனை காவ்யா காவிந்தி மீண்டும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுழல்பந்துவீச்சு சகலதுறை வீராங்கனை தெவ்மி விஹங்கா முதல் தடவையாக இலங்கை மகளிர் ரி20 குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற சேத்தனா விமுக்தியும் ரி20 குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அறிமுகமான மிதாலி அயோத்யா மீண்டும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் ரி20 தொடரில் விளையாடிய இடதுகை சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீரவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அத்துடன் ரஷ்மிகா செவ்வந்தி, நிமாஷா மீப்பகே ஆகியோருக்கும் குழாத்தில வாய்ப்பு வழங்கப்பபடவிலை.
சமரி அத்தபத்து அணித் தலைவியாகவும் ஹர்ஷித்தா சமரவிக்ரம உப தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் ரி20 குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), இமேஷா துலானி, சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம (உப தலைவி), கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹாசினி பெரேரா, கௌஷினி நுதியங்கனா, தெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, சமுதி ப்ரபோதா, சேத்தனா விமுக்தி, காவ்யா காவிந்தி, மிதாலி அயோத்யா.

