செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ பட முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ பட முன்னோட்டம்

1 minutes read

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் ரியோ ராஜ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தில் ரியோ ராஜ், வர்த்திகா, பாலாஜி, மாகாபா ஆனந்த், மாளவிகா அவினாஷ், சேத்தன், நயனா, பிரியங்கா நாயர், முனீஸ்காந்த், தீபா வெங்கட், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அங்கீத் மேனன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா ( EYWA) என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்.. உணர்வுகள் – அனைத்து தரப்பு ரசிகர்களையும்… அவர்களது கவனத்தை எளிதாகவும், விரைவாகவும் கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.