தெற்கு இலண்டனில் உள்ள ஒரு டவர் பிளாக்கில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஓகஸ்ட் 24, ஓவலின் டோர்செட் வீதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு அழைக்கப்பட்டனர்.
நள்ளிரவுக்குப் பிறகு 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இலண்டன் தீயணைப்பு படை அழைக்கப்பட்டது.
சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் அங்கு விரைந்ததுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி, அதிகாலை 1.30 மணிக்கு முன்பு தீ கட்டுக்குள் வந்ததாக அறிவித்தனர்.
இந்த தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.