வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உள்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு ஏற்றவாறு வர்த்தகர்கள் உள்நாட்டுப் பொருள்களை விற்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க, அது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான உறவில் தொய்வு ஏற்பட்டுள்ள வேளையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.
இந்தியாவில் வரிக் குறைப்பு பற்றி இன்று (22) அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் மோடியின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அண்மையில் 50 சதவீதம் வரி விதித்தார். அது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், McDonald’s மற்றும் Pepsi போன்ற அமெரிக்கத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கவும் இந்தியாவில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.