இந்தியாவுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஃபலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கை மேலும் 14 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
தேநீர் இடைவேளையின்போது பசிந்து சூரியபண்டார 90 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: 503 – 9 விக். டிக்ளயார்ட் (தேவ்தூத் படிக்கல் 117, த்ருவ் ஜுரெல் 115 ஆ.இ., ரிஷாப் பான்ட் 63, ஷுப்மான் கில் 50, அசித்த பெர்னாண்டோ 106 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 132 – 2 விக்,, கேஷர நுவன்த 154 – 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 290 (சொனால் தினூஷ 103, பசிந்து சூரியபண்டார 80, கமிந்து மெண்டிஸ் 32, ப்ராசித் கிரிஷ்ணா 52 – 3 விக்., மானவ் சுதார் 85 – 3 விக், சரன்ஷ் ஜெய்ன் 69 – 2 விக்.)
இலங்கை (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 4ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 199- 3 விக். (பசிந்து சூரியபண்டார 90 ஆ.இ., கமிந்து மெண்டிஸ் 55, கமில் மிஷார 32)