செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப 5 நாடுகள் திட்டம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப 5 நாடுகள் திட்டம்

0 minutes read

சட்டப்பூர்வ குடியுரிமை இன்றி தங்கியுள்ள புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு 5 உறுப்பு நாடுகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன.

டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதுடன், இதற்காக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளன.

இருப்பினும், இத்தகைய திருப்பி அனுப்பும் மையங்களை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படும் நாடுகளின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட், திருப்பி அனுப்பும் மையங்களை நிறுவுவதற்கு வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை இந்த ஆண்டு மூன்றாம் நாடுகளுடன் எட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.

கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

இந்த விவகாரம் குறித்து இவ்வருடம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள இக்குழுவினர், அடுத்தகட்டமாக செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடி ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.