செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தை இலங்கை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தை இலங்கை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

0 minutes read

 

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படத்தை இலங்கையில் வெளியிட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் இப்படத்தின் வெளியிட்டு உரிமையை நாஸ் லங்கா ஹோல்டிங் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.