9
இலங்கையில் பல பாகங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, சுமார் 2,322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5,254 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மது போதையில் வாகனம் செலுத்தியதாக 650 பேரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இன்று அதிகாலை 4 மணித்தியாலங்கள் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயம்.
