வடகொரியா ரகசியமாக அணு ஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து வருவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்கள் சிங்கப்பூர் சந்திப்பில் அணு ஆயுத சோதனையில் ஈடுபட போவதில்லை என வடகொரியா உறுதியளித்திருந்தது.
இந்நிலையில் அணுஆயுத சோதனைக்காக யுரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
