செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்!

1 minutes read

 

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டு படகு பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் போலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனா.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா உயிருடன் கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் மெரைன் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் தீவிர மண்டபம் கடலோர பகுதிகளில் சோதணையில் ஈடுபட்டனர் அப்போது மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுபடகை சேதானை செய்ய சென்ற போது படகில் இருந்த சிலர் கடலில் குதித்து தப்பி ஓடினர்,இதனை கண்ட அதிகாரிகள் நாட்டு படகை கைபற்றி சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ தடை செய்யப்ட்ட கடல் அட்டைகள்; மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து நாட்டு படகையும் மற்றும் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் பதினைந்து லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடர் கடல் பிராந்தியங்கள் வழியாக ராமநாதபுரம் கடலோரபப்குதிகளில் தடைசெய்யப்பட்ட கடல் அடடைகள் போதைப்பொருட்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பiயும் மீறி இலங்கைக்கு கடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது ​

செய்தியாளர் ஆ.பிரபுராவ் இராமேஸ்வரம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.