கொரோனா வைரசுக்கான ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை குறைந்த விலையில் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்த மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்ததுள்ள நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி 70 – 80 சதவீதம் செயல்திறன் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ‘ஆஸ்ட்ராஜெனெகா’ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.