May 28, 2023 4:17 pm

பாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அக்டோபர் 2 ரிலீசாகும் வார் படத்தில் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குருவாகிய ஹரித்திக்கை ஜெயிக்க துடுக்கும் சிஷ்யன் வேடத்தில் டைகர் நடித்துள்ளார். இந்த பாடலில் இருவரும் செம்ம மாஸாக ஆடியுள்ளனர். ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு பாக்கியராஜ் பாடலை ஷேர் செய்து இருந்தார்.

இந்நிலையில் சந்தனுவின் இந்த ஸ்டேட்டஸுக்கு பலரும் பதில் தட்டி வந்தனர். அதில் தான் ரசிகர் ஒருவர் நம் கோலிவுட்டில் இதே பாடலுக்கு சாந்தனு மற்றும் விஜய் ஆடும் பட்சத்தில் அது வேற லெவல் மாஸாக இருக்கும் என பதிவிட்டார்.

சாந்தனுவும் இந்த தருணத்திற்காக நான் காத்திருப்பேன். அண்ணனுடன் ஒரே பிரம்மில் நடிப்பது என்பது என் வாழ்வின் சிறந்த தருணம் என பதில் தட்டினார்.

தளபதி 64  படத்தில் சாந்தனு இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு பிகில் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், சாந்தனு மாணவராகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்