
நேற்று (09) ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம்வௌியானது.
இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை கேலி செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து லைக்கா நிறுவனம் கூறுகையில் , கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டன. இருப்பினும், அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுகிறது என லைக்கா அறிக்கைவெளியிட்டுள்ளது.