Sunday, January 24, 2021

இதையும் படிங்க

டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி

மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல்...

‘பா.இரஞ்சித் – யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்...

தோனி பட நடிகைக்கு கொலை மிரட்டல்…. பாலிவுட்டில் பரபரப்பு!

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான...

நயன்தாராவுக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்காக படத்தின் கதையை படக்குழுவினர் மாற்றயிருக்கிறார்கள்.மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில்...

மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி | யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். 'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப்...

80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி!

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...

ஆசிரியர்

எம். எஸ். சுப்புலக்ஷ்மியை பற்றிய தகவல்கள்

‘இசைப் பேரரசி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 16, 1916

இடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)

பணி: கர்நாடக இசைப் பாடகி

இறப்பு: டிசம்பர் 11, 2004

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1916  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பாட்டி வயலின் வாசிப்பவராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கினார். இவருக்கு சக்திவேல் என்ற சகோதரரும், வடிவாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை:

இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதிலிருந்தே சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய “செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்” கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கிய சுப்புலக்ஷ்மி அவர்கள், “பண்டிட் நாராயணராவ் வியாஸ்” என்பவரின் கீழ் இந்துஸ்தானி இசையையும் கற்றார். பின்னர், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், செம்மை வைத்தியநாத பாகவதர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் போன்றவர்களின் இசை கச்சேரிகளுக்கும் தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.

சுப்புலக்ஷ்மியின் இசைப் பயணம்:

இசையுலகினரால் ‘எம்.எஸ்’ என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு முதல் குரு அவரது தாயார்தான். தன்னுடைய தாயாருடன் அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடிவந்த சுப்புலக்ஷ்மி அவர்கள், 1926 ஆம் ஆண்டு அவருடைய தாயாரின் வீணை இசையில் இவரின் பாடலும் இணைந்து முதல் இசைத்தட்டு வெளிவந்தது. பின்னர், 1929ல் இவருடைய முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேறியது. அதன் பிறகு பல கச்சேரிகள் நடைபெற்றன. தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் தன்வசபடுத்திய சுப்புலக்ஷ்மி அவர்கள், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகராக வலம்வந்தார். ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்ற பாடல்கள் இவருடைய குரலில் மிகவும் பிரபலமானவையாகும்.

1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கிலப் பாடலை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை போன்றவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும்.

திரைப்பட வாழ்க்கை:

1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், அப்படத்தில் பாடியும், நடித்தும் இருப்பார். பின்னர், ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 1941ல் வெளியான “சாவித்திரி” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.

எல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது எனலாம். இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எம்.எஸ். பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை உருகவைத்தது எனலாம். இந்தப் படம், பின்னர் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

திருமண வாழ்க்கை:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ‘சகுந்தலை’ படத்தை தயாரித்த கல்கி சதாசிவம் என்பவரை 1940 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள திருநீர்மலை மலைக் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சதாசிவம் ஒரு இசை ப்ரியராக மட்டுமல்லாமல், இசைக் கற்றவராகாவும் இருந்தார்.

இறுதி காலம்:

1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார். இதுவே, அவருடைய கடைசி கச்சேரியாகவும் அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மரணம் அடைந்தார்.

விருதுகள்:

 • 1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.
 • 1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” வழங்கப்பட்டது.
 • 1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம் “சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.
 • 1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு இசை பேரரிஞர் விருது வழங்கியது.
 • 1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
 • 1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
 • 1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச அரசால் வழங்கப்பட்டது.
 • 1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.
 • 1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.
 • 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 • 2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

கர்நாடக இசையுலகின் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின்  இசை கீதங்கள் என்றென்றைக்கும் கேட்பவர்களை ஒரு கணம் மறக்க வைக்கும். தேனினும் இனிய காந்த குரலால் கோடானுக்கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், இந்திய நாட்டிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாவார். தான் பாடி ஈட்டிய பெரும் செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்றால் அது மிகையாகாது!!!

நன்றி : itstamil.com

இதையும் படிங்க

நடிகை ஆத்மியாவுக்கு திருமணம்.. எப்போ தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஆத்மியாவுக்கு திருமணம். சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம்...

அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை | ரெஜினா

அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை என்று பிரபல நடிகை ரெஜினா பேட்டி அளித்துள்ளார். தமிழில் அதிக படங்களில் நடித்துள்ள...

சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்

சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் மரணமடைந்தது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் சில்லுக்கருப்பட்டி....

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ | திரை விமர்சனம்

நடிகர்சிம்புநடிகைநிதி அகர்வால்இயக்குனர்சுசீந்திரன்இசைதமன்ஓளிப்பதிவுதிருநாவுக்கரசு திரைப்பட போக்கு... வாரம்12தரவரிசை22 கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்...

கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு!

சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக...

பள்ளி செல்ல முடியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய நடிகர் அஜித்!!

பள்ளிச் செல்ல முடியாமல் தவித்த சிறுவனின் கல்விச் செலவை முழுமையாக தான் ஏற்று கொள்வதாக நடிகர் அஜித் வாக்குறுதிக் கொடுத்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோத்தாபயவின் ஏமாற்று வித்தை | பொறுப்புக்கூறலை குழிதோண்டி புதைக்க முடியாது | சம்பந்தன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள...

ஜெனிவாவில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை மீது எத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அதன் உள்ளடக்கங்கள் எவ்விதமாக அமையவுள்ளன என்பது பற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர்...

ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது...

98 ஓட்டங்களுடன் இங்கிலாந்து | மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இலங்கை அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஆஸி. ஓபனிலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே 2021 அவுஸ்திரேலிய ஓபனில் போட்டியிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஃபெடெக்ஸ் ஏ.டி.பி...

கல்வியமைச்சர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள...

துயர் பகிர்வு