செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாநாடு இன்று ரிலீஸ் இல்லை… பிரச்சனையால் மீண்டும் தள்ளிபோனது!

மாநாடு இன்று ரிலீஸ் இல்லை… பிரச்சனையால் மீண்டும் தள்ளிபோனது!

0 minutes read

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று ) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.