என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சி | நடிகை பாவனா வேதனை

  • மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பாவனா.
  • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1768462-3.jpg

சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் வருத்தமடைந்த பாவனா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1768463-2.jpg

அதில், “ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன், என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்