இளவரசியாக அதிதி ஷங்கர் புதிய போட்டோஷூட்

நானும் இளவரசி தான் என அதிதி ஷங்கர் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த குந்தவை மற்றும் நந்தினி ஆகிய கேரக்டர்களில் நடித்த த்ரிஷா, ஐஸ்வர்யாராயின் இளவரசி கெட்டப்புகள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதே போன்று இளவரசி கெட்டப்பில் அதிதி ஷங்கர் மேக்கப் போட்டு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்

இந்த போட்டோ ஷூட் நவராத்திரியின் முதல் நாளில் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிதி ஷங்கர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

ஆசிரியர்