March 31, 2023 7:24 am

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கும் ‘கிரிமினல்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கிரிமினல்’. இதில் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

எமோஷனல் ட்ராமா ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்ஸா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். விரைவில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் இம்மாதம் ‘பத்து தல’ எனும் திரைப்படமும், அடுத்த மாதம் ‘ஓகஸ்ட் 16 1947’ எனும் திரைப்படமும் பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்