June 7, 2023 7:23 am

சிரஞ்சீவி எனக்கு கடவுள் | நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் பொன்னம்பலம் தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்களுக்கும் நன்றி. நிறைய உதவி செய்தாலும் எனக்கு மேலும் உதவி தேவைப்பட்டதால் நண்பர் ஒருவரின் உதவியுடன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் போன் நம்பரை பெற்றேன்.

அவருக்கு என் உடல்நிலை சரியில்லை. தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பத்தே நிமிடத்தில் எனக்கு சிரஞ்சீவி போன் செய்தார். சரி ஏதோ ஒரு லட்சமோ 2 லட்சமோ உதவி செய்வார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் போனில் ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டார்.

நான் உடனே அண்ணா குடும்பம் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்றேன். உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தேன். ஆனால் என்னிடம் என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை. கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே கவனித்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா என்னை நேராக வந்து பார்த்து சிரஞ்சீவி சொன்னதாக சொல்லி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். கடவுள் போல் எனக்கு சிரஞ்சீவி உதவினார் என்று கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்