October 4, 2023 5:01 am

சமூக வலைதளங்களில் அமைதியாகிய சித்தார்த்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவார் என்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தவறுகளை சுட்டி காட்டுவார் என்பதும் தெரிந்ததே.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை என்றும் அமைதியாகிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். ’சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தது உண்மைதான், ஆனால் இப்போது என்னை நம்பி தயாரிப்பாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளார்கள், அதனால் நான் தற்போது அமைதியாகிவிட்டேன்.

சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கம், அதனால் தான் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்