அத்தியாவசிய பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, இங்கிலாந்தின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இலண்டன் லிவர்பூல் ரயில் நிலையம், மார்ச் மாதத்தில் ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 15, 21, 22, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் இந்த ரயில் நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் இந்த மூடல் காரணமாக பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கிரேட்டர் ஆங்கிலியா (Greater Anglia), c2c, எலிசபெத் ரயில் (Elizabeth) சேவை மற்றும் இலண்டன் தரைவழி ரயில் சேவைகளில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக மாற்று பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் தேசிய ரயில் சேவை அல்லது தொடர்புடைய ரயில் சேவை நிறுவனங்களின் இணையதளங்களைப் பார்வையிட்டு தகவல்களை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.