செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ஈரான் மீதான போரை ஆதரிக்கமாட்டோம் – ஸ்பெயின் பிரதமர் உறுதி

ஈரான் மீதான போரை ஆதரிக்கமாட்டோம் – ஸ்பெயின் பிரதமர் உறுதி

1 minutes read

ஈரான் மீது நடைபெறும் போரை ஆதரிக்க ஸ்பெயின் தயாரில்லை என்று அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் (Pedro Sánchez) தெளிவாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக பலரின் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் மீது நடத்தப்படும் போர் நியாயமற்றதும் ஆபத்தானதுமாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்தத் தாக்குதல்களால் கோடிக்கணக்கான பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்பெயின் அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஈரானைத் தாக்குவதற்காக தனது நாட்டின் இராணுவத் தளங்களை பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்க ஸ்பெயின் மறுத்துள்ளது.

இதனால் ஸ்பெயின் ஒரு மோசமான நாடு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை நிறுத்தப் போவதாக அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.