உடல் அழகைப் பராமரித்தல்உடல் அழகைப் பராமரித்தல்

 

உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியாக உள்ளன. காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும்,

எந்த பொருளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம் என்றும் பார்க்கலாமா…

1. பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் 10 நிமிடம் முகத்திற்கு தேய்த்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.

2. பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.

3. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். அதற்கு பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

4. பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 4-5 நிமிடம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

5. மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

6. பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும்.

ஆசிரியர்