Wednesday, January 27, 2021

இதையும் படிங்க

கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது..

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம்...

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் | கர்ப்பிணிகளே உஷார்!

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது? நச்சுக் காய்கறிகள்...

குழந்தை அறிவாளியாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யணும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டும் என ஆசை இருப்பது சகஜம்தான். ஒரு குழந்தை அறிவாளியாக பிறக்க...

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் குறைவது எதனால்..

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு  இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும்...

எவ்வாறான உணவுகளை உண்பதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும்!

இன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. கருப்பைப் புற்றுநோயை விட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப்...

முகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க

முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும்...

ஆசிரியர்

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.

அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை.

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் கேஃபைன் உட்கொள்ளுதலை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும் ஒரு நாளில் இரண்டு கப் தேநீரோ காபியோ பருகுவதில் தவறில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது இவ்வளவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற எந்த பாதுகாப்பு நிலையும் இல்லை என்று மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனால், சற்று எச்சரிக்கையுடன் கேஃபைனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து.

நாள் ஒன்றுக்கு 200 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவான அளவு கேஃபைன் எடுத்துக்கொள்வது, கருச்சிதைவு அல்லது கருவில் இருக்கும் போது குழந்தை சரியாக வளர்வது தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எவ்வளவு கேஃபைன் உட்கொள்கிறார்கள் என்பதை கணக்கிடும் தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன.

இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை எழுதிய ஐஸ்லாந்தின் ரேக்ஜவிக் பல்கலைக்கழகத்தின் உளவலியலாளர் பேராசிரியர் ஜேக் ஜேம்ஸ், இந்த ஆய்வு கண்காணிப்பில் எடுக்கப்பட்டது என்றும் கர்ப்ப காலத்தில் கேஃபைன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதை நிச்சயமாக நிரூபிக்க முடியாது என்று தெரிவிக்கிறார்.

ஆனால், தான் செய்த ஆய்வுபடி, கர்ப்பிணி பெண்கள் தேநீர் அல்லது காஃபி பருகுவதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது என அவர் பரிந்துரைக்கிறார்.

இதனை மற்ற வல்லுநர்கள் வலுவாக எதிர்கின்றனர்.

கேஃபைன் எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்தலாம் என்றும் ஆனால் கர்ப்பத்தின்போது இதனை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது கிடையாது என பிரிட்டன் சுகாதார சேவை, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் கல்லூரிகளின் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா காலத்தில் பிரசவம் – ஒரு கர்ப்பிணி பெண்ணின் அனுபவம்

இந்த ஆய்வறிக்கையில் அதிக எச்சரிக்கை இருப்பதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லையென்றும் ஆஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகத்தின் மருந்தாளரான மருத்துவர் லூக் தெரிவிக்கிறார்.

“கர்ப்பமாக இருக்கும்போது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கேஃபைன் எடுத்துக்கொள்ளலாம் என்பதை புரியவைக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

லண்டன் கிங்க்ஸ் கல்லூரியின் மகப்பேறியியல் துறை பேராசிரியர் ஆண்டரூ ஷெனன் கூறுகையில், இதுபோன்ற சில ஆய்வறிக்கைகளில் தவறு இருக்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்

மேலும், தேநீர் மற்றும் காஃபி குடிப்பவர்களின் மற்ற வழக்கங்களை இதில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. உதாரணமாக புகைப்பிடித்தல்.

“மனிதர்களின் உணவுப் பழக்கத்தில், கேஃபைன் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்று அவர் தெரிவிக்கிறார்.

நன்றி : வெப் துனியா

இதையும் படிங்க

கர்ப்பகாலத்தில் சொத்தைப் பல்லைப் பிடுங்கலாமா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில் * எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே)...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம்...

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

குதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை!

பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக்...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்

1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.

தொடர்புச் செய்திகள்

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக்...

குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிற்று உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா

இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு!

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...

துயர் பகிர்வு