செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? பெண்களே இதை செய்யுங்கள்…….

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? பெண்களே இதை செய்யுங்கள்…….

1 minutes read

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இந்த உலகமே வாழ்த்தினாலும் கூட, எந்த ஒரு ஜோடியாலும் 24×7 சந்தோஷமாகவே இருக்க முடியாது. டீ குடிக்கும் முன் வேறு இனிப்பு உண்டுவிட்டால்.. அந்த டீயின் சுவை மறைந்துவிடும்.

அப்படி தான்… தொடர்ந்து இனிப்பு (சந்தோஷம்) மட்டுமே வாழ்வில் நிறைந்திருந்தால். வாழ்க்கை சுவைக்காது. அவ்வப்போது மிளகாயும் கடிக்க வேண்டும். அப்போது தான் இனிப்பின் சுவை எவ்வளவு அருமையானது என்பதை உணர முடியும்.

வாழ்க்கை என்பது நாணயத்தின் இரு பக்கங்களை போல தானே, சுண்டிவிடும் போதெல்லாம் பூ விழுந்துக் கொண்டே இருக்குமா என்ன? பூவும், தலையும் மாறி, மாறி விழத்தான் செய்யும். வெறும் பூவோ, வெறும் தலையோ அழகானதா..? அல்ல பூ சூடிய தலை அழகானதா? நீங்களே யோசிங்க…

சரி! உங்கள் வாழ்வில் அன்யோன்யம் அதிகரிக்க… நீங்க செய்ய வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன…

ஒப்பீடு வேண்டாம்…

ஒருவேளை நீங்கள் முன்னதாக ஒரு நபரை காதலித்திருந்தாலோ அல்லது என் காதலன் / கணவன் இப்படியாக தான் இருக்க வேண்டும் என்று எதேனும் கனவு கொண்டிருந்தாலோ… அதை உங்கள் துணையுடன் ஒப்பிட வேண்டாம்.

நான் விரும்புவதே போன்றே ஒரு துணை வேண்டும் என்றால் ரோபாட் தான் செய்துக் கொள்ள வேண்டும். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.

அச்சம், பாதுகாப்பின்மை பற்றி பேசுங்க…

அச்சம், பாதுகாப்பின்மை என்பது மனித உணர்வுகளில் இயல்பானவை… நீங்கள் எதுக் குறித்து அச்சப்படுகிறீர்கள், எந்தெந்த விஷயங்கள் உங்களை பாதுகாப்பின்மையாக உணர செய்கிறது என்று உங்கள் துணையுடன் பேசி தீர்த்துக் கொள்வது நலம். இப்படி பேசிக் கொள்வது உங்கள இருவர் மத்தியில் கருத்து வேறுபாடு அல்லது தவறான புரிதல் உருவாகாமல் காக்கும்.

மகிழ்ச்சியாக இருக்க…

உங்கள் இருவருக்குள் இருக்கும் உறவை எந்தெந்த செயல் எல்லாம் மகிழ்சிக்குமோ அதை செய்ய சற்றும் யோசிக்க வேண்டாம். உங்கள் செயல் ஒன்றினை உங்கள் துணை விரும்புகிறார் என்றால், அது மிகையாமால், அவருக்கு போரடிக்காமல் எப்படி எல்லாம் உங்களால் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் செய்திடுங்கள். இது ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பு குறையாமல் இருக்க உதவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.