குணா கவியழகனுக்கு கி.பி.அரவிந்தன் இலக்கியப் பரிசு

தமிழின் முக்கியமான சிற்றிதழ்களுள் ஒன்றான ‘காக்கைச் சிறகினிலே’, கி.பி.அரவிந்தன் பெயரில் இலக்கியப் பரிசு வழங்கிவருகிறது.

குணா கவியழகன் எழுதிய ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலானது கி.பி.அரவிந்தனின் ஐந்தாம் ஆண்டு நினைவு இலக்கியப் பரிசுக்குத் தேர்வாகியிருக்கிறது. சயந்தனின் ‘ஆதிரை’, தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ்: கதைப் புத்தகம்’, தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’ ஆகிய நாவல்களும் சிறப்புத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆசிரியர்