March 26, 2023 11:36 pm

கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் கத்தாரில் நடைபெற்ற கவியரங்கு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நூருல் ஹுதா உமர்

CWF கத்தார் அனுசரணையில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் கத்தார் முத்தமிழ் மன்றம் ஆகியன கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த ‘கத்தார் மண்ணில் கவியரங்கு’  நிகழ்வு மதீனா கலிஃபா தெற்கு CWF அலுவலகத்தில் இலங்கை கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.

“வண்ணத் தமிழெடுப்போம் வானமெங்கும் சிறகடிப்போம்” எனும் தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் மெய்யன் நடராஜ் – (இலங்கை), எஸ். சிவசங்கர் – (திருநெல்வேலி, இந்தியா), முகமது சிக்கந்தர் (புதுவை சிக்கந்தர்) – (புதுக்கோட்டை, இந்தியா), எம். வை. எம். ஷரீப் -(பலகத்துறை, இலங்கை), முஹம்மத் சமீன் – (ஹெம்மாதகம, இலங்கை), பாலமுனை றிஸ்வான் –  (பாலமுனை, இலங்கை), நிஹாசா நிசார்- (கஹட்டோவிட்ட, இலங்கை), ஜோன்ஸ் ரமனாஜ் – (திருச்சி, இந்தியா), துந்துவ ஹஸீனா முன்ஸிர் – (இலங்கை) ஆகியோர் கவிதை பாடினர்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பதிதியாக கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதரக சிரேஷ்ட அதிகாரி அஷ்ஷேக். ரஷீத். எம்.பியாஸ் (நளீமி) , கௌரவ அதிதிகளாக கத்தார் இஸ்லாமிய வங்கி முகாமையாளர் முஹம்மத் சிராஜ் ஏ. முத்தலீப், CWF தலைவர் முஹம்மத் அக்ரம், கத்தார் முத்தமிழ் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் குரு ஸ்ரீ, கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத் தலைவி ஷோபா ராஜ், இலங்கை அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரி, சிரேஷ்ட எழுத்தாளர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், அனைத்து சம்மேளன கத்தார் தலைவர் அமீர்தீன் மௌலானா, இலங்கையின் பிரபல நாவலாசிரியை ஜரீனா முஸ்தபா ஆகியோரும்,  விசேட அதிதிகளாக ஸ்கை தமிழ் வலையமைப்பின் பணிப்பாளர் ஜே. எம். பாஸித், ஸ்கை தமிழ் வலையமைப்பின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, வலியுல்லாஹ் செயலாளர் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை, புத்தளம் சங்க கத்தார் தலைவர் சாஜித் ஜிப்ரி, கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் உதவிப் பொதுச் செயலாளர், மோகன பிரியா பிரசாத்,  கத்தார் முத்தமிழ் மன்ற விஜய் ஆனந்த், கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் நிர்வாக குழு உறுப்பினர் ஹாழிர் மற்றும் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்