Saturday, October 23, 2021

இதையும் படிங்க

பிறந்த நாள் முதல் ஒரு வயது வரை… குழந்தைக்குத் தவிர்க்க வேண்டியவை…

நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது. குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டியவை என்னவென்று விரிவாக...

வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’!

எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள்...

மனம் விட்டு அழுவதற்கு அறை

மனம் விட்டு பேச யாருமில்லை என்ற கவலையை போக்க அழுகை அறை (CRYING ROOM) என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும்.. அறிகுறிகளும்…

இன்று இளம் தாய்மார்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்!

கொரோனா நோய் (கோவிட் 19) கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன...

குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

குழந்தைகளிடம் அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து...

ஆசிரியர்

எப்படி பல் துலக்க வேண்டும்?

நம் குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பது சோம்பல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் அவர்கள் கையில் கொடுத்தால்… பல் துலக்காமல் வாயில் டூத் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு தூங்கி வழிவார்கள். டூத் பேஸ்ட்டை ருசிபார்த்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இதை நாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், ஆரம்பத்திலேயே குழந்தைகளின் பல் சுத்தத்தைக் கவனிக்கத் தவறினால் அது எதிர்காலத்தில் பற்சொத்தை, ஈறுகளில் பிரச்னை போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்கிறார் பல் மருத்துவர் செந்தில்குமரன். பல் துலக்க வைக்கும்போதும், குழந்தைகளின் பல் சுத்தத்திலும் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்…

குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குப் பற்கள் முளைக்கும்வரையில் அதன் பல் ஈறுகளை, உப்புத் தண்ணீரில் ஊறவைத்த தூய்மையான சிறிய துணியைக்கொண்டு தினமும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கத் தொடங்கிய சில நாள்களில் இருந்தே அவர்களின் பல் சுத்தத்தில் பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் எல்லாக் குழந்தைகளுமே பல் துலக்க அடம்பிடிப்பார்கள். அப்போது பெற்றோரும் குழந்தைகளுடன் சேர்ந்து பல் துலக்கினால், அவர்களைப் பார்த்து குழந்தைகளும் தாங்களாகவே பல் துலக்கத் தொடங்குவார்கள்.

10 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட், பிரஷ்ஷுக்குப் பதிலாகக் குழந்தைகளுக்கென உள்ள ஃபுளூரைடு சேர்க்காத டூத் பேஸ்ட் மற்றும் மிருதுவாக இருக்கும் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் குழந்தைகளைப் பல் துலக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை ஒரு பட்டாணி அளவிலேயே வைத்துக் கொடுக்க வேண்டும்.

பல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை ஈறுகளில் இருந்து பற்களை நோக்கி செலுத்தித் தேய்க்க வேண்டும்.

கடவாய் பற்களில் உணவுத் துகள்கள் தங்கியிருக்க அதிக வாய்ப்பிருக்கும் என்பதால், அவற்றை டூத் பிரஷ் கொண்டு நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.

பொதுவாக இரண்டு நிமிடங்கள் பல் துலக்கினால் போதுமானது. எனவே, குழந்தைகள் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமலும் குறையாமலும் பல் துலக்க வேண்டும்.

பல் துலக்கிய பிறகு வாயில் உள்ள பேஸ்ட் நுரை நன்றாகப் போகும்படி தூய்மையான நீரைக்கொண்டு கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் குளிர்ந்த நீரைவிட வெதுவெதுப்பான நீரில் பல் துலக்குவதே சிறந்தது.

குழந்தைகளுக்குப் பல் துலக்கக் கொடுக்கும் டூத் பேஸ்ட்டை பல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் உணவு உண்ட பிறகு குழந்தைகளைத் தூய்மையான நீரில் வாய் கொப்பளிக்கச் சொல்வது அவசியம்.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது குழந்தைகளைப் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவர்களின் பற்களின் ஆரோக்கியத்தை செக்-அப் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பற்சொத்தை, பல்வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க

இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது.

மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது. 1. கிட்னி...

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை...

நுரையீரலில் உள்ள அசுத்த காற்றை வெளியேற்றும் எளிய நாடி சுத்தி!

விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கையை சின் முத்திரையில் வைக்கவும். வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக...

உணவு உண்ணும் முறைகள்

இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.

தலைக்கவசமும்..முடி உதிர்தலும்..!

இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல்...

தொடர்புச் செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை...

சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்

பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.

சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த...

மேலும் பதிவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை...

உணவு உண்ணும் முறைகள்

இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.

உங்க வீட்டில பிரட் இருக்கா? அப்படின்னா இப்படி ஒரு முறை செஞ்சி தான் பாருங்களேன்.

எல்லோருக்குமே பிரட் ரெசிபி என்றால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். வெறும் பிரெட்டை கூட வீட்டில் நாம் விட்டு வைப்பது இல்லை. ஒரு சிலருடைய...

சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்

பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.

நமக்கே தெரியாமல் வீட்டில் நாம் செய்யக்கூடிய சிறு தவறுகள்..!

இந்த தவறுகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டிற்கு கஷ்டங்கள் வருவாமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சில தவறுகளை பற்றி தான் இன்றைய...

பெண்கள் விரும்பும் முத்து நகைகள்

வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு