இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது : தென்கொரியாஇலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது : தென்கொரியா

as4

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பணிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ தென் கொரியா முன்வந்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தென் கொரிய தலைநகர் சியோலில் தென் கொரிய பிரதமர் சுங் ஹொங் வொன்னை சந்தித்து உரையாடிய போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தென் கொரிய பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான உறுதியான திட்டங்கள் அவசியம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இரு கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி உதவி செய்ய தென் கொரியா உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்