சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மோதி ஒன்றன் மேல் ஒன்று குவிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உடனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
