May 31, 2023 6:01 pm

கொரோனாத் தொற்றில் இருந்து 1,252 பேர் மீண்டனர்! 617 பேர் சிகிச்சையில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

#Covid-19 #Corona Virus #Kuwait

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முல்லைத்தீவு, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 02 பேர், குவைத்திலிருந்து வந்த ஒருவர் என 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 884 பேர் கடற்படையினராவர். அவர்களில் 679 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் இதுவரை 643 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,880 பேரில் தற்போது 617 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 11 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 63 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்