சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் கடந்த 5ம் திகதி மூவரசம்பட்டு குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
இதையடுத்து இந்த குளம் மிகவும் ஆழமானது என்பதால் குளக்கரையை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதை பூட்டப்பட்டது.
இந்நிலையில், 5 பேர் உயிரிழந்த குளம் என்பதால், அப்பகுதி மக்கள் சிலர் அச்சத்தில் ரகசியமாக எலுமிச்சை, குங்குமம், வெற்றிலை போன்ற பொருட்களை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்துள்ளனர்.
இவ்வாறு குளத்தின் அருகே இந்த பொருட்களை கண்ட மக்கள் பயத்தில் உள்ளனர். குளத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் குளத்தின் பிரதான வாயில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.