இலங்கை நாடாளுமன்றத்தில் உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் மேலதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நேற்று மாலை சபையில் நடைபெற்றது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்பிரகாரம் உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.