Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் | நிலாந்தன்

மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் ...

கொத்தலாவல சட்டமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதனை?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி...

வைரஸ் தொற்றுக்குள்ளும் வாள்கள் ஓயவில்லை? நிலாந்தன்

அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு  பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு...

வடகடலில் சீனர்கள்? நிலாந்தன்

வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர்  என்று கருதி ருவிற்றரில் ஒரு...

மட்டக்களப்பு வரலாற்றில் காணாமல் போன ‘பெரியதுறை’ | பிரசாத் சொக்கலிங்கம்

நீர்வழிசார்  போக்குவரத்தின் தொடக்க மற்றும் முடிவு புள்ளிகளில் உருவான தளம் அதன் பயன்பாட்டுத் தன்மையில் இறங்குதுறை, துறைமுகம், படகுத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. இந்தப்போக்கில்...

பொசன் நாடகம்? நிலாந்தன்

கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று...

ஆசிரியர்

தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்: நிலாந்தன்

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன.

கேள்வி ஒன்று -மிகவும் அடிப்படையான கேள்வி தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமா அல்லது சிறுபான்மை இனமா?

கேள்வி 2-தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் எந்த அடிப்படையில் அவர்களை நீங்கள் தேசிய இனம் என்று வரையறுக்கிறீர்கள் ?அப்படி இல்லை என்றால் இந்த அடிப்படையில் அவர்களை சிறுபான்மை இனம் என்று வரையறுக்கிறீர்கள்?

கேள்வி 3 -தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் இருப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

கேள்வி நாலு -அவ்வாறு ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதன் அடிப்படையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வை நீங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கிறீர்கள்?

கேள்வி 5 -தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் 2009 மே மாதம் வரையிலும் நடந்தவற்றை இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?அதற்குப் பின்னரும் அரச திணைக்களங்களுக்கூடாக நடைபெற்று வருகின்றவை நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்பு சார் இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

கேள்வி 6 -அப்படி அது இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டால் அந்த இனப்படுகொலையை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை நீங்கள் எப்படிப்பட்ட அனைத்துலக பொறிமுறை ஒன்றுக் கூடாக விஞ்ஞானபூர்வமாக திரட்டி வைத்திருக்கிறீர்கள்?

கேள்வி எழு – இனப்படுகொலைதான் நடந்தது என்பதனை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை கடந்த 11 ஆண்டுகளில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஒரு முறைமைக் கூடாக திரட்டவில்லையென்றால் ஏன் திரட்ட முடியவில்லை ?இனி வரும் ஐந்தாண்டுகளில் அப்படி திரட்டுவதற்கான வழி வரைபடம் ஏதும் உங்களிடம் உண்டா?

கேள்வி 8- நடந்தது இனப்படுகொலை என்றால் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே இனப்பிரச்சினைக் கான தீர்வும் ஆகும் என்பதனை நீங்கள் கொள்கை அளவிலும் செயல் பூர்வமாகவும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

கேள்வி 9- அவ்வாறு பரிகார நீதிதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று நம்பினால் அதைக் குறிப்பாக உங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரங்களிலும் முன் வைப்பீர்களா?

கேள்வி 10- அவ்வாறு முன்வைக்கும் போது பரிகார நீதியை வென்றெடுப்பதற்கான செயல் பூர்வ வழி வரைபடத்தை உங்கள் தேர்தல் அறிக்கைகளில் முன் வைப்பீர்களா ?

கேள்வி 11-தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கேட்பது பரிகார நீதியை. ஆனால் உலக சமூகம் தமிழ் மக்களுக்கு தர முன்வந்திருப்பது நிலை மாறு கால நீதியை. அப்படி என்றால் நிலை மாறு கால நீதியிலிருந்து பரிகார நீதியை நோக்கி செல்வதற்குரிய உங்களுடைய வழி வரைபடம் என்ன?

கேள்வி 12-குறிப்பாக ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியில் நிலைமாறுகால நீதியையே அரசாங்கம் நிராகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆயின் நிலைமாறுகால நீதியை வென்றெடுப்பதற்கு தேர்தல் வழிமுறைகளுக்கும் அப்பால் உபாயங்கள் உண்டா ? அவை யாவை?

கேள்வி13- நடந்தது இனப்படுகொலை இல்லை என்றால் அது என்ன ? அதை எந்த அடிப்படையில் இனப்படுகொலை இல்லை என்று கூறுகிறீர்கள்?

கேள்வி 14- தேசிய விடுதலை தான் சமூக விடுதலையும் என்று உறுதியாகக் கூறுவீர்களா?

கேள்வி 15- அப்படி கூறுவீர்களா ஆயின் உங்களுடைய வேட்பாளர்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்?

கேள்வி 16- உங்களுடைய வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெற்றிவாய்ப்பை கொண்டவர்கள் ?அவர்களை நீங்கள் நட்சத்திர அந்தஸ்துடைய கட்சி பிரமுகர் ஒருவர் வெல்வதற்காக தனது சமூகத்தின் வாக்குகளை வாங்கித் தந்துவிட்டு தோல்வியுறும் ஒரு பலியாடாகத்தான் பயன்படுத்தவில்லை என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?

கேள்வி17-அப்படி நிரூபிப்பது என்றால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து நட்சத்திர அந்தஸ்துடைய கட்சி பிரமுகரை அகற்றுவீர்களா? அல்லது குறைந்தபட்சம் அவர் வென்றாலும் தோற்றாலும் தேசியப் பட்டியலில் அவருக்கு இடம் வழங்கப்படும் என்று உறுதியாகக் கூற உங்களில் எத்தனை பேர் தயார்?

கேள்வி 18- இனப்பிரச்சினைக்கு உரிய நிரந்தர தீவுக்கும் அப்பால் யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உங்களுடைய தீர்வுக்கான வழி வரைபடம் என்ன?

கேள்வி 19-அரசியல் கைதிகளுக்கு எப்படி விடுதலை பெற்று கொடுப்பீர்கள்?

கேள்வி 20-ஆக்கிரமிக்கப்பட்ட இருக்கும் காணிகளை எப்படி முழுமையாக விடுவித்துக் கொடுப்பீர்கள்?

கேள்வி 21-காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்பீர்கள்?

கேள்வி 22- 2009க்கு பின்னரும் அரச திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலையை தடுப்பதற்கு உடனடியான வழிவகைகள் என்ன ? அதற்குரிய வழி வரைபடம் என்ன?

கேள்வி 23- தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களின் தேசத்துக்கு உரிய வெளியுறவுக் கொள்கை என்ன? அந்த வெளியுறவுக் கொள்கையை பகிரங்கமாக முன்வைப்பீர்களா ?

கேள்வி 24- தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வை பிரதிநிதித்துவ அரசியல் என்ற ஒரே வழிமுறைக்கூடாக மட்டும் அடைந்து விடலாமா ?அல்லது ஒரு தமிழ் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உண்டா ?அப்படியோரு தமிழ்த் தேசியக் கட்டமைப்பை தேசியப் பேரியக்கத்தை கடந்த 11 ஆண்டுகளாக நீங்கள் ஏன் கட்டவில்லை ?இனிமேலும் அவ்வாறு கட்டி எழுப்புவீர்கள் என்று எப்படி நம்புவது?

கேள்வி 25- இனப்பிரச்சினை சாராம்சத்திலும் நடைமுறையிலும் ஒரு உள்நாட்டு பிரச்சினை அல்ல. அது ஒரு அனைத்துலக பிரச்சினை. அதற்கு அனைத்துலக அளவிலும் பிராந்திய அளவிலும் உருவாக்கப்படும் ஒரு தீர்வே நிரந்தரமாக அமையும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

கேள்வி 26-அப்படி நம்பினால் தீர்வை அடைவதற்கு தாயகம் தமிழகம் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற மூன்று கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆயின் அதற்குரிய வழி வரைபடம் என்ன?

கேள்வி 27- கடந்த பதினோரு ஆண்டுகளாக அப்படி ஒரு வழி வரைபடம் உங்களிடம் இருந்ததா? அதன்மூலம் நீங்கள் சாதித்தவை என்ன ? சாதிக்க முடியாதவை என்ன? சாதிக்க முடியாதவறுற்க்குக் காரணம் என்ன? இனிமேலும் வரும் 5 ஆண்டுகளில் அதை சாதிப்பீர்கள் என்று எப்படி நம்புவது?

கேள்வி 28- கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்திருந்தால் உழைத்திருப்பீர்கள் தானே ? உங்களுடைய மொத்த சொத்து விபரம் என்ன?

கேள்வி 29- ஆயுதப் போராட்டத்தை உங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளில் எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறீர்கள்?

கேள்வி 30- உங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தும் பொழுது அதை நீங்கள் ஒரு வேஷமாக அல்லது முகமூடியாக அல்லது ஊன்று கோலாக அல்லது ஊறுகாய் போல பயன்படுத்தவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? குறிப்பாக கடந்த 11 ஆண்டுகளில் நீங்கள் ஆயுதப் போராட்டத்தை விசுவாசமாகவும் இதயசுத்தியுடனும் பயன்படுத்தினீர்கள் என்பதற்கு ஆதாரங்களை காட்டுவீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறலாம் கூறாமல் விடலாம். ஆனால் கேள்விகள் உங்களை நோக்கி மட்டும் தொடுக்கப்படவில்லை. உங்களுக்கு வாக்களிக்கப் போகும் மக்களை நோக்கியும் தொடுக்கப்படுகின்றன. அவர்களுடைய புத்திசாலித்தனத்தை நோக்கியும் மறதியை நோக்கியும் மனச்சாட்சியை நோக்கியும் இக்கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

-நிலாந்தன்

இதையும் படிங்க

ஊசிக் கதைகள் | நிலாந்தன்

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

கொவிட்டுக்குப் பின்னரான பாடசாலைக்கல்வி எதிர் கொண்டுவரும் சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைய காலங்களில் கொவிட் பெரும் தொற்று காரணமாக வேலை இழப்பு பொருளாதாரச்சரிவு சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்...

போரும் வைரசும் ஒன்றல்ல | நிலாந்தன்

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக்...

சாமிநாத ஐயருக்குப் பின்னர் ஓர் ‘ஐயர்’ | கலாநிதி சுதர்சன்

நூல்களால் கட்டும் தேசம்   கலாநிதி செல்லத்துரை சுதர்சன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) 

13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? | நிலாந்தன்

இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு...

தொடர்புச் செய்திகள்

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான்...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வேட்பாளர்களின் கருத்துக் களம்!

  முதல்வன் ஊடாக வலைமையப்புடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட ஊடாகவியலாளர்களின் ஒருங்கிணைப்பில் நெற்றிக் கண் நண்பர்கள் வட்டம் அமைப்பின் அனுசரணையுடன் கட்சி வேட்பாளர்களுக்கான கருத்துக்களம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச்சங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில்...

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா? | நிலாந்தன்

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...

மேலும் பதிவுகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | மத்திய வங்கி ஆளுநர்

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

மகாத்மாவை அடையாளம் காட்டிய மதுரை மாநகரம்

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறி 100 ஆண்டுகள் ஆகிறது. காந்தியடிகளை அடையாளம் காட்டியது தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரைதான்.

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

ஊசிக் கதைகள் | நிலாந்தன்

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு! தியாக தீபம்...

ஹர்ஷல் படேல் ஹெட்ரிக் | 56 ஓட்டங்களினால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

ஹர்ஷல் படேலின் ஹெட்ரிக் சாதனையுடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 54 ஓட்டங்களினால் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல்....

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

துயர் பகிர்வு