Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை எரித்திரியா | சுதந்திரத்தின் பின்னரான சர்வாதிகார ஆட்சி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

எரித்திரியா | சுதந்திரத்தின் பின்னரான சர்வாதிகார ஆட்சி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

7 minutes read

வெற்றி அடைந்த விடுதலைப் போராட்டம்! தோல்வியை நோக்கும் பொருளாதர வளர்ச்சி !!

கட்டுரையாளர்: ஐங்கரன் விக்கினேஸ்வரா

மிகச் சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த எரித்திரியா மக்கள் தங்கள் சுய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர்.

1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.  

தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரி எத்தியோப்பிய படைகளைச் சிறைப் பிடித்தனர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எரித்திரியாவின் இன்றைய நிலை :

நீண்டகாலமாக போராடி விடுதலை அடைந்த எரித்திரியாவின் இன்றைய நிலை மகிழ்வானதாக இல்லை என்பதும் உண்மையே.

முடிவுறாத எத்தியோப்பிய எல்லைப்பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே 1998 முதல் 2000 வரை கடும் போர் நடந்தது. கடந்த ஆண்டு மீளவும் இரு நாடுகளுக்கும் இடையே கடும் எல்லை யுத்தம் நடந்தது.

சிறிது காலம் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாட்டு எல்லையில் அமைதி திரும்பினாலும் மீள கடும் எல்லை யுத்தம் நடந்த வண்ணம் உள்ளது.

சர்வாதிகார ஆட்சி :

எரித்திரியாவின் சுதந்திரத்திற்கான 30 ஆண்டுகால யுத்தம் முடிந்த பின்னர், எரித்திரியா 1993 ல் எத்தியோப்பியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தது.

 1994இல் புதிய நாடு அதன் முதல் ஒரே தேசியத் தேர்தல்களை நடத்தியது. ஜனாதிபதியாக ஐசியாஸ் அப்ஃபெரி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தேசத்திற்கான நம்பிக்கை அதிகமானதாக இருந்தது.1990களில் பின் தோன்றிய ஊழல் மற்றும் அரச தோல்விகள் ஆகியவற்றிலிருந்து புதிய பாதையை அமைக்க

எதிர்பார்க்கப்பட்டது.

ஆபிரிக்காவின் மறுமலர்ச்சி நாடுகளில் ஒன்றாக மிளிரும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் தோல்வியை நோக்கும் பொருளாதர வளர்ச்சியினாலும், நீண்ட கால சர்வாதிகார ஆட்சியினால் இக்கனவும் தகர்ந்தது.

எரித்திரியா விடுதலை:

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று. எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு 1993இல் உருவானது.

விடுதலைக்காக உச்ச விலை :

1885ம் ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ப் பிரபுக்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்கு செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. எதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது.

எரித்திரியா 1890 இல் செங்கடலில் இத்தாலியால் குடியேற்ற நாடாக உருவாக்கப்பட்டது. 1896 இல் எதியோப்பியா மீது இத்தாலி படை எடுத்தது. அப்படை எடுப்பின் போது எரித்திரியா தன் தளங்களை இத்தாலிக்கு வழங்கியது. ஆனாலும் படையெடுப்பு எதியோப்பியாவால் முறியடிக்கப்பட்டது.

1936 இல் இத்தாலி மீண்டும் எதியோப்பியா மீது போர் தொடுத்தது. இம்முறை எரித்திரியா இத்தாலியுடன் இணைந்து போரிட்டது. இத்தாலி எதியோப்பியாவை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தது.  இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலியின் ஆதிக்கம் முடிவுக்கு வர எதியோப்பியாவும் எரித்திரியாவும் இங்கிலாந்தின் வசமாகின.

இரண்டாவது உலகப்போரை அடுத்து இத்தாலியின் காலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றி மன்னர் ஹெயிலி செலாஸ்சியை மீண்டு எத்தியோப்பாவின் மன்னன் ஆக்கியது. 1952 இல் ஐநா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டு வந்தது.

அத்தோடு எரித்திரியாவின் விடுதலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்திரியாவிற்கு ஒரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது எரித்திரியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.

1952 இல் இங்கிலாந்து எரித்திரியா-எதியோப்பியா இணையாட்சியை உருவாக்கினர். 1962 இல் எரித்திரியச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு எதியோப்பியா ஒற்றையாட்சிக்குள் வந்தது. இதன் பின்னரே எரித்திரியாவின் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது.

எரித்திரியா விடுதலைப் போராட்டம்:

ஏரித்தியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்ததன் விளைவாக, 1962இல் மன்னர் ஹேயிலி லொஸ்சி ஏரித்தியா நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அதனை எத்தியோப்பியவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார்.

1974ம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் சுகந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது. மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஐிஸ்ட்டு ஹேயிலி மரியம் தலைமையில் இயங்கியது.

1960களில் ஏரித்தியாவின் விடுதலைப் போராட்டம் ஏரித்தியவின் விடுதலை முன்னனி தலைமையில் தொடங்கியது.

1970ம் ஆண்டு கடைசிப்பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுகளுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி செயல்ப்பட்டர்.

இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது.1970ல் இருந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னனி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1977இல் எத்தியாப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால் அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான் வழியாக கொண்டு சென்று குவித்தது.

எத்தியோப்பிய படைகள் பின்வாங்கல் :

இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது. 1978 மற்றும் 1986 காலப்பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டு முறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியல் முடிந்தன.

இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கொரிலா தாக்குதல்களையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற்கொண்டது. 1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கும் முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படைகள் எதிர்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது.

இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்த்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டை நாடான சுடானுக்கு ஓடித்தப்பினார்கள்.

1982இல் எத்தியோப்பியா 6 வது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற் கொண்டது. எத்தியோபபிய படையில் 120 000 ஆயிரம் படையினர் இருந்தனர். இதற்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூடப்பட்டது.

1984 மே மாதத்திலும் 1986இலும் அஸ்மேரா என்றா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி ஊடுருவித்தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன.

ஆயுதக் களஞ்சியங்களும் எரிபொருள் சூதங்களும் ஏரியூட்டப்படடன.

1980ல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தை தாக்கி கைப்பற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

சோவியத் யூனியன் ஆதரவு;

இந்தப் போராட்ட காலகட்டங்களில் எரித்திரியாவுக்கு ஆதரவளித்து வந்த சோவியத் யூனியன் நிலை மாறுகிறது. இப்பொழுது சோவியத் யூனியன் பக்கம் மாறி எதியோப்பியாவின் பக்கம் சாய்கிறது. இராணுவ உதவிகளைக் கொட்டிக் குவிக்கிறது. எதியோப்பியாவுக்கு சோவியத் யூனியன் உதவிட எதியோப்பியாவின் படையெடுப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத எரித்திரியா பின்வாங்குகிறது தோல்வியைத் தழுவிக்கொண்டு! EPLF இன் கட்டுப்பாட்டுப் பகுதி பாரிய அளவில் சுருங்குகிறது.

ஆயினும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசங்களில் நிலை கொண்ட போராளிகள் தொடர்ந்து போராடுகிறார்கள். எவ்வித விட்டுக்கொடுப்புமின்றி. அவர்களை முற்றாக அழித்துவிட முடிவதில்லை.

எதியோப்பிய அரசால் இந்தச் சந்தர்ப்பத்தில் EPLFஇன் முக்கியஸ்தர்கள் பலர் கட்சி மாறி இணைந்து கொள்கிறார்கள் எதியோப்பிய அரசோடு. இன்னும் பலர் விலகிச் சென்று விடுகின்றனர்..

1989 இல் கொர்பச்சேவின் ஆட்சிக்காலத்தில் கிளாஸ்நோஸ்ற், பெரஸ்ரோறிக்கா என்று மாற்றங்கள் எற்பட்டு சோசலிச ஆட்சிக் கொள்கைகள் மாற்றம் பெற்று சோவியத் யூனியன் உடைகிறது.

ரசியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் காரணமாக எதியோப்பியாவுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவிகள் ரசியாவால் நிறுத்தப்படுகின்றன. மீண்டும் எரித்திரிய EPLF மீண்டெழுந்து தனது நிலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1993 இல் எரித்திரியா உத்தியோககபூர்வமாகத் தனது சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து முடிக்கின்றது.

 அமைதிப் பேச்சுவார்த்தை :

அமெரிக்கா அனுசரணை வழங்க எரித்திரியா – எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. 1991 மே மாதம் மெங்கிஸ்து அரசு கவிழ, மே நடுவில் மெங்ஐிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு இடைக்கால அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாப்வேயில் அரசியல் புகலிடம் கோரினார்.

மே மாத கடைசியில் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட மற்றய போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றின. எத்தியோப்பிய படைகளைக் களத்தில் வெற்றி கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மே 1991 இல் இபி எல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை நிறுவியது. அரசுத் தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையஸ் அவர்கள் நியமிக்கப்பட்டர். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசமையாக மாறியது.

எரித்திரியாவிற்கு விடுதலை

1993 ஏப்ரலில் 23-25 நாட்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள்.

எரித்தியா மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24இல் அதிகாரபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு ஐநா கண்காணிப்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரலில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள்.

நீண்டகாலமாக போராடிய எரித்திரியாவின் இன்றைய நிலை மகிழ்வானதாக இல்லை என்பதும் உண்மையே. ஆபிரிக்காவின் மறுமலர்ச்சி நாடுகளில் ஒன்றாக மிளிரும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் தோல்வியை நோக்கும் பொருளாதர வளர்ச்சியினாலும், நீண்ட கால சர்வாதிகார ஆட்சியினால் இக்கனவும் தகர்ந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More