Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஜெயக்குமார் – பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு புது வழிகாட்டிய பெருமகன் | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

ஜெயக்குமார் – பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு புது வழிகாட்டிய பெருமகன் | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

2 minutes read

அமரர் யோகேஸ்வரன்ஜெயக்குமாரின் திடீர் மரணம் அவரை அறிந்தவர்களுக்கும். அவருடன் கூடி வாழ்ந்தவர்களுக்கும் பேரிடியான ஒரு செய்தியாகும். அமரர் ஜெயக்குமாருடன் பன்னிரண்டு ஆண்டுகள் மாணவ ஆலோசகராக. சிரேஷ்ட மாணவ ஆலோசகராக ஒன்றாகப் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு, அவரிடம் காணப்பட்ட நிர்வாக ஆளுமை, பல்கலைக்கழகம் மீதான அதீத பற்று. மாணவர் நலனில் கொண்டிருந்த அக்கறை. மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் அவர் கையாண்ட இராஜதந்திர அணுகுமுறை. மாணவர்களுக்குரிய வசதி. வாய்ப்புக்களை அவரவர் குடும்ப நிலைக்கு ஏற்ப நீதியான முறையில் பகிர்ந்தளிப்பதில் அவர் கையாண்ட மனிதநேயம், யாரிடமும் வன்சொல் பயன்படுத்தாத புன்சிரிப்பு என்பன அவருக்கேயுரிய தனித்துவமான அடையாளங்களாகும்.

2000 – 2009 இற்கும் இடைப்பட்ட காலம் எமது பல்கலைக்கழகம் முன்பொரு போதும் சந்திக்காத பல சவால்களை எதிர்நோக்கியிருந்த காலமாகும். அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக நிர்வாகமும் ஆசிரிய மாணவ சமூகமும் பலபக்க அழுத்தங்களையும் தலையீடுகளையும் பக்குவமாகக் கையாள வேண்டியிருந்த காலமாகும். அந்நிலையிலும் எமது பல்கலைக்கழகக் கல்வி சிறிதும் பிசகாமல் தொடர்ந்து நடைபெறுவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு துணையாக இருந்து பணியாற்றிய நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அமரர் ஜெயக்குமார் அவர்களைப் பார்க்கின்றேன்

2009 இல் யுத்தம் மௌனித்ததன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் கடல் தரை வழியாகப் பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பதே பாதுகாப்பானதென: நம்பினர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வசதி.வாய்ப்புகள் பல்கலைக்கழகத்திடம் இருக்கவில்லை. இதைச் சரியாகப் புரிந்த கொண்ட அமரர் ஜெயக்குமார் மாணவர் களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பான விடுதிகளைக் கண்டறியத் துவிச்சக்கரவண்டியிலேயே சென்று தனியார் விடுதிகளை ஒழுங்குபடுத்தியதை நான் அறிவேன். அவ்விடுதிகளில் தங்கவைக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் எவற்றையெல்லாம் செய்து கொடுக்க முடியுமோ அவற்றை யெல்லாம் ஒரு மாணவ நலன் சேவைக் கிளையின் உதவிப் பதிவாளராக இருந்து குறுகிய காலத்தில் செய்து கொடுத்த பெருமைக்குரியவர்களில் அமரர் ஜெயக்குமாரும் ஒருவராவர். இப்பணிகளைச் செய்து முடிப்பதில் அமரரின் நலச்சேவைக் கிளையில் பணியாற்றிய உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் அவர்கள் அமரர் மீது கொண்டிருந்த நன்மதிப்பும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் . அவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளுடனும் முரண்படுவதும் அவர்களை விமர்சனம் செய்வதும் ஒரு பொதுவான நிகழ்வாகும். ஆனால் அவற்றிற்கு விதி விலக்கானவர்
அமரர் ஜெயக்குமார் பல்கலைக் கழகச்சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் தனது பாடத்தையும் அனுபவத்தை தொடர்ந்தும் வழங்கியவர். பல்லைக். நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியவர். அவரின் திடீர் மரணம் அமரரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல பல்கலைக்கழக சமூககத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரின் சாந்தியெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
முன்னாள் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More