9
நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சுயேச்சைக் குழு 17 ஆகியவை சார்பில் தலா ஒருவர் என மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 6 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கருணநாதன் இளங்குமரன் (32,102 விருப்பு வாக்குகள்), வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா (20,430 விருப்பு வாக்குகள்), ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் (17,579 விருப்பு வாக்குகள்) ஆகியோரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. சிவஞானம் சிறீதரன் (32,833 விருப்பு வாக்குகள்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 விருப்பு வாக்குகள்), சுயேச்சைக் குழு 17 சார்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (20,487 விருப்பு வாக்குகள்) ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.