வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய் இருந்ததாக சி.பி.எஸ் செய்தி நிறுவனம் கூறியது.

வழக்கமான நாள் 24 மணி நேரம், அதாவது 86,400 வினாடிகள் நீடிக்கும். ஆனால் 2016ஆம் ஆண்டிலிருந்து பூமி சுற்றும் வேகம் அதிகரித்துள்ளதாக லோமோனோசோவ் மொஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானி லியோனிட் ஸோட்டோவ் சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதற்குப் பூமியின் அலைகள் காரணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஒரு சில நாட்கள் மட்டுமே குறுகியதாக இருக்கும் என்று கூறிய அவர், அந்தப் போக்குத் தொடர்ந்தால் பூமியில் நேரம் கணக்கிடப்படும் விதம் மாற்றப்பட வேண்டியிருக்கலாம் என்றார்.

ஆசிரியர்