செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சி

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சி

1 minutes read

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இங்கிலாந்து பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகால வெயில் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சில வணிகங்களுக்குக் கூடுதல் உத்வேகத்தை அளித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த இரண்டாம் காலாண்டில் சேவைத் துறை மற்றும் உற்பத்தித் துறை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றன.

கணினி நிரலாக்கம், விளம்பரம் மற்றும் மருந்துத் துறைகள் ஆகியன குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக கணினி நிரலாக்கம் மற்றும் ஆலோசனை சேவைகள் 3.7 சதவீத வளர்ச்சியும், விளம்பரத் துறை 4.3 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளன.

ஜூன் மாதத்தில் தொடங்கிய ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் விருந்தோம்பல் துறையில் வாடிக்கையாளர் வருகையை அதிகரித்தன. மேலும், ஜூன் மாதத்தின் வெப்ப அலைகளும் பொருளாதார வளர்சிக்குச் சாதகமாக அமைந்தன.

பொருளாதாரம் தற்போது கடந்த ஆண்டை விட 1.2 சதவீத பெரியதாக இருந்தாலும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரானில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிச்சயமற்ற நிலை ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ஜான் ஹீலி கவலை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கக்கூடும் என்றும், வணிகச் சூழல் இன்னும் பலவீனமாகவே இருப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிதியமைச்சர் வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யவுள்ள வரவு – செலவுத் திட்டம், இந்த மந்தமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாகப் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அரசாங்கத்தின் வரி மற்றும் கடன் கொள்கைகளே பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.