செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி? மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி? மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 minutes read

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்பான வழக்கை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து பெற்ற கடன்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, மோசடி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கிடையில், விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளும் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அவர் சட்டப் போராட்டத்தையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், விஜய் மல்லையா தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நேற்று (12) விசாரணைக்கு வந்தது.

இதன்போது, “இந்தப் பிரச்சினைக்கு உண்மையில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், சமரசப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டனவா என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கைகள் விஜய் மல்லையாவுக்கு எதிரான குற்றவியல் வழக்கை பாதிக்காத வகையில், வழக்கை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.