June 7, 2023 7:33 am

சீனாவில் புதுவகை கொரோனா; அச்சத்தில் மக்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சீனாவில் புதுவகை கொரோனா

சீனாவுக்கு கொரோனாவால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருவதாக மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சீன ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்றும், இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அங்குள்ள மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஓமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாட்டால், சீனாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதிக்கும் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று சீன ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்