புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் இன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

இலங்கையில் இன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

0 minutes read

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை இலக்காகக் கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகள், இன்று (17) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக 2024 ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, பொலிஸார் மற்றும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் அலஸ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.