செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

1 minutes read

இராமநாதபுரம், பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17ஆம் திகதி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மண்டபம் முதல் இராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரயில் கடந்து சென்றது.

இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.