இந்தியா – மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
Meitei எனும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டதால், கலவரம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
பாதுகாப்புப் படைகளோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதியதாக பாதுகாப்பு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸ் நிலையத்திற்குள் கலவரம் செய்ததாகவும், பஸ்ஸைக் கொளுத்தியதாகவும் தலைநகர் இம்பாலின் சில வீதிகளை மறித்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை இந்துக்களுக்கும் கிறிஸ்துவ kuki சமூகத்திற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கும் மோதல் சம்பவங்களில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
