செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொல்கத்தாவில் கடை விவகாரத்தால் குழு மோதல்; 8 பொலிஸார் காயம்

கொல்கத்தாவில் கடை விவகாரத்தால் குழு மோதல்; 8 பொலிஸார் காயம்

0 minutes read

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடை ஒன்றைத் திறப்பது தொடர்பில் இரு குழுவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பெண் ஒருவர் உட்பட 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

மோதலைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் முயற்சித்த போது குழுவினரின் தாக்குதலுக்கு பொலிஸார் ஆளாகினர்.

பொலிஸார் மீது கற்கள் எறியப்பட்டதால் பலர் காயமடைந்தனர். பொலிஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் இருந்த அந்தக் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகையை வீதியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் பொலிஸார் மற்றும் சிறப்புப் படையும் அங்கு களமிறக்கப்பட்டதாக Hindustan Times தெரிவித்தது.

பொலிஸாரைத் தாக்கியவர்களை அடையாளங்கண்டு கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, இதுவரை நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.