ஏர் இந்தியா விமானங்களில் கடந்த ஓராண்டில் 51 பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வருடாந்த தணிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா போயிங் 787 விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். அதற்கும் தணிக்கைக் குழு கண்டறிந்த விதிமீறல்களுக்கும் தொடர்பு இல்லை.
நடைமுறைகளை மேம்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு சோதனை நடத்துவது வழக்கம்.
இம்மாதச் சோதனையில் மிக வெளிப்படையாய் நடந்து கொண்டதாக ஏர் இந்தியா தெரிவித்தது.
குறைகளைக் களைய குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.