2028ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
எனினும், குறித்த பணிக்குழுவின் பணிகள் என்ன என்பது குறித்து முழுமையான தகவல்களை வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை.
அதேவேளை, “பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஓர் அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்ப முடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா 2002ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியிருந்தது.
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.