கிழக்காசியாவில் அண்மைய நாட்களில் மிக வலுவான சூறாவளியான ரகாசா ஆட்கோண்டுள்ளது. இதனால் தாய்வான் மற்றும் சீனா ஆகியன பெரும் பாதிப்புகளை சந்திந்து வருகின்றன. ரகாசா சூறாவளி தற்போது தென் சீனாவைக் கடந்து செல்கிறது.
இதனால் குவாங்டோங் மாநிலத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : சீனாவில் சூப்பர் சூறாவளி ரகசா: இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேற்றம்
மாநிலத்தின் 10 நகரங்களில் சூறாவளி மரங்களை வேரோடு சாய்த்துள்ளது. பலத்தச் சேதம் ஏற்ப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளும் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மேற்கே செல்லும் ரகாசா சூறாவளி தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குவாங்சி வட்டாரத்தை நெருங்குகிறது சூறாவளி. முன்னெச்சரிக்கையாகக் கடற்கரையோர நகரங்களில் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பணிகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
