அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலாவுக்கு விண்வெளி விரர்களை அனுப்பத் திட்டமிட்டு வருகிறது.
இந்தத் தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்தப் பயணம், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பை 3 மணிநேரத்திற்கு உன்னிப்பாக ஆராய அந்தப் பயணம் உதவும் என்று சொல்லப்படுகிறது.
நிலாவுக்குச் செல்லவிருப்பதாக நம்பப்படும் 4 வீரர்களும் 1960களிலும் 1970களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட Apollo Moon திட்டங்களின் மூலம் உத்வேகம் பெற்றனர் எனக் கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.